புதுச்சேரி: மதுபான கடைகளை மூட அதிரடி உத்தரவு!
By : Janani
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு அதிரடி நடவடிக்கையாக, ஏப்ரல் 30 நள்ளிரவு வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட திங்கட்கிழமை அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 1 `மற்றும் 2 ஆம் தேதியில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் புதிதாக 747 பேர் பாதிப்படைந்துள்ளது, இது மொத்த எண்ணிக்கையை 54,026 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 758 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் சதவீதம் 1.40 மற்றும் 84.70 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் இந்த இறுதியில் முழு ஊரடங்கு விதிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வார இறுதி ஊரடங்கு ஏப்ரல் 23 இரவு 10 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 26 காலை 5 மணிக்கு முடிவடைந்தது.
source: https://www.timesnownews.com/india/article/puducherry-orders-liquor-shops-to-close-with-immediate-effect-to-contain-coronavirus-cases-details/749824