Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகத் தமிழிசை சௌந்தர ராஜன் அறிவிப்பு!

புதுச்சேரி: சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகத்  தமிழிசை சௌந்தர ராஜன் அறிவிப்பு!

JananiBy : Janani

  |  7 May 2021 7:47 AM GMT

புதுச்சேரியில் இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் பணிபுரியும் ANMs, சுகாதார ஆய்வாளர்கள், வார்டு பாய்ஸ், தொழில்நுட்ப வல்லுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைத்துக்கட்ட சுகாதார தொழிலாளர்களுக்கும் 5 கோடி செலவில் ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகப் புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.


புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜென் உற்பத்தி வசதியைக் கண்காணித்த போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். யூனியன் பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் சுமைகளைத் தங்குவதற்கு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு திறன் உள்ளதா என்பதை ஆராய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த தொற்று அதிகம் இளைஞர்களிடையே காணப்படுவதாகவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

"மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள 1276 படுக்கைகளுக்குக் கூடுதலாக 800 படுக்கை வசதிகளைத் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார செயல்பாடுகள் எந்த சிக்கலும் இன்றி தொடர்வதற்கு ஸ்டேடியம் படுக்கை வசதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெம்டேசிவிற் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படுகின்றது," என்று அவர் தெரிவித்தார்.


வரும் காலங்களிலும் தட்டுப்பாடு இருக்காது என்பதை உறுதி செய்து, மக்கள் இந்த கொரோனா தொற்று பரவாமல் இருக்க தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று அவர் தெரிவித்தார். தங்கள் வீட்டுலையே இருக்குமாறும் மற்றும் இளைஞரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

source: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/06/puducherry-lt-governor-announces-incentive-for-healthcare-workers-amid-covid-19-surge-2299316.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News