Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஊரடங்கைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடல்!

புதுச்சேரி: ஊரடங்கைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடல்!

JananiBy : Janani

  |  11 May 2021 2:44 AM GMT

நாடு முழுவதும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, புதுச்சேரியில் அடுத்து வரும் 15 நாட்களுக்கு விதிக்கப்பட்ட முழு ஊரடங்கைத் தொடர்ந்து புதுச்சேரியில் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் பூட்டப்பட்டது.


பால் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து வணிக செயல்பாட்டிற்கு மாவட்டத்தில் மதியம் 12 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மணி நேரம் மாவட்டங்களில் பரப்பான வாகன மற்றும் மக்கள் நடமாட்டத்தைக் கொண்டிருந்தது.

மேலும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு எந்தவித பொது போக்குவரத்தும் இல்லாததால் சற்று சிரமம் அடைந்தனர். மேலும் மாநிலங்களுக்கு இடையே உள்ள எல்லைகளில் காலை 6 மணிக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் அவர்களை திருப்பியனுப்பினர். மேலும் தேவையில்லாத நடமாட்டத்தைத் தவிரக் கடலூரில், சாலைகளுக்குக் குறுக்கே தடுப்புகளை அமைத்தனர்.

கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மாவட்டம் முழுவதும் 1500 காவல் பணியாளர்களை பணியமர்த்தியதாகக் காவல் ஆணையர் ஸ்ரீ அபினவ் தெரிவித்தார். வாகன நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்குப் புதுச்சேரியில் 11 நுழைவு வாயிலில் சீல் வைத்தனர். மேலும் கூடுதலாக 50 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து வணிக நடவடிக்கைகளும் மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது, மேலும் முழு ஊரடங்கை உறுதிசெய்வதற்கு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் சரியான காரணங்கள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் பாண்டியன் தெரிவித்தார்.

Source: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News