புதுச்சேரியில் அதிரடி! ஊரடங்கு நீட்டிப்பா? யாருக்கு அனுமதி?
By : Janani
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் கடைகள் மதியம் 12 வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், மே 24 வரை பொது ஊரடங்கு கூறிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று அவர் அறிவித்தார். பால் மற்றும் அத்தியாவசிய விநியோகங்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள தளர்வுகள் கூடிய ஊரடங்கு மே 31 வரை நடைமுறையில் இருக்கும் மற்றும் நிலைமையைப் பொருத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஊரடங்கு வழிமுறைகளை மீறுவது அல்லது கொரோனா வழிமுறைகளை கடைப்பிடிக்காதது போன்ற நடைமுறைகள் குறித்துப் புகாரளிக்குமாறும் புதுச்சேரி காவல்துறை தெரிவித்தது.
இதற்கிடையில், இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று புதிதாகப் பாதித்த எண்ணிக்கை 2,40,842 ஆகப் பதிவாகியுள்ளது. இதுவே ஏப்ரல் 21 முதல் பரவிய தொற்று எண்ணிக்கை மிகக் குறைந்த சதவீதமாகும்.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கொரோனா தொற்று பாதிப்பில் மொத்த சதவீதம் குறையத் தொடங்கினாலும், 382 மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
Source: Times of India