கிராமப்புறங்களில் தீவிர தடுப்பூசி திட்டத்தை தொடங்கவுள்ளது புதுவை அரசு!
By : Janani
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள கிராமங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் ஒரு புது திட்டமாக "கோவிட் பிரீ கிராமங்கள்" என்ற திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளதாகப் புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.
மேலும் ராஜ் நிவாஸில் இருந்து வியாழக்கிழமை பேசிய அவர், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாகவும் மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் கூடுதலாக 2,000 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுக் கூடுதல் ஆக்சிஜென் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். தற்போது சட்டமன்றத்தில் பதவி ஏற்ற நிலையில், அந்தத்தந்த சட்டமன்றத் தொகுதியில் அவர்கள் கொரோனா பராமரிப்பு வசதி ஏற்பாடு செய்வது மற்றும் தடுப்பூசி செலுத்துவதை விரைவு படுத்துவது போன்றவற்றை அவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் சுகாதார அமைச்சகத்தின் கொரோனா நிதி சேகரிப்புக்கு உதவி செய்த தொழில்துறை நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் புதுச்சேரியில் ஆக்சிஜென் சிஸ்டேர்ஸ் என்ற திட்டமும் நிறுவப்பட்டுள்ளது. இதன்கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் ஆக்சிஜென் அளவு ஆக்சிமீட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.
மேலும் காரைக்காலில் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் தொற்று நோய் காலங்களில் பாதிப்படைந்த அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் திட்டத்தைக் கொண்டுவர முதலமைச்சர் ரங்கசாமி உடன் அவர் கலந்துரையாடினார். "மிக விரைவில் யூனியன் பிரதேசத்தில் அந்த திட்டம் அறிவிக்கப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.
source: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/27/puducherry-set-to-launch-intensive-vaccination-programme-in-rural-areas-2308342.html