கருப்பு பூஞ்சையை ஆரம்பத்திலேயே கண்டறிய புதுச்சேரியில் விழிப்புணர்வு - அசத்தும் ஆளுநர் தமிழிசை!
By : Janani
தற்போது கொரோனா தொற்றைத் தொடர்ந்து பரவி வரும் கருப்பு பூஞ்சை குறித்து முன்னரே கண்டுபிடிக்க, புதுச்சேரி பொது மக்களிடையே அது குறித்த அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுகளைச் செய்து வருவதாகப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
"தொற்று நோய் சட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை நோயாக அறிவிக்கப்பட்டது, மக்களிடையே அது குறித்த அறிகுறிகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அனைத்து வேலைகளையும் அரசு செய்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு வழங்கிய மருத்துவ உபகரணங்களைப் புதுச்சேரி சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்த பின்னர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறுவதாக Dr தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பொதுமக்களிடையே இந்த நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் நோய் முற்றிய பிறகே சிகிச்சைக்கு வருகின்றனர் மற்றும் இதுவே திங்களன்று ஜிப்மரில் எழிலரசி இறப்புக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இதுவரை புதுச்சேரியில் 40 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு பேர் இறந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலாளர் T அருண் தெரிவித்தார். மேலும் வீட்டுவேலையே ஆக்சிஜென் உபயோகப் படுத்துபவர்கள் சுத்திகரிக்கத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த நோய் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குப் பரவும் நோயில்லை. மேலும் இது கொரோனா நோயாளிகளில் நீண்ட நாளில் சேதம் ஏற்பட்டால் இந்த நோய் ஏற்படலாம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஸ்டெராய்டு மருந்தை உட்கொள்ளுபவர்கள் ஏற்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நோய் ஆரம்பக்காலத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை இந்த நோயைக் குணப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். கருப்பு பூஞ்சைக்கு ஆரம்பக்காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பின்னர் அது மூக்கு மற்றும் வாய் வழியாகப் பிற பகுதிகளுக்குப் பரவும் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் தேவையான அளவிற்குத் தடுப்பூசி இருப்பு உள்ளது மற்றும் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி மக்களைப் பாதுகாக்க நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. மேலும் மக்களுக்குத் தேவையான அளவு கொரோனா மருந்து இருப்புகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது உறுதி செய்துள்ளது. மேலும் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்பது அல்லது பதுக்கி வைப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Source: New Indian Express