Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: பல திட்டங்களுக்கான நிதி அனுமதி வழங்கிய ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி: பல திட்டங்களுக்கான நிதி அனுமதி வழங்கிய ஆளுநர் தமிழிசை!

JananiBy : Janani

  |  2 July 2021 1:39 PM GMT

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் மாநிலங்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார். வெள்ளிக்கிழமை அன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதியோர் மற்றும் ஆதரவற்ற ஓய்வூதியத்தை வழங்குவதற்காக 1,54,847 பயனாளர்களுக்கு ₹29,65,21,500 மற்றும் ஜூன் 2021 மாதத்தில் 20,952 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ₹4,28,21,200 வழங்கும் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.


ஜூன் 29-இல் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக பொதுப்பணித் துறைக்கு ₹33.72 கோடி நிதியுதவி வழங்குவதாக லெப்டினென்ட் ஆளுநர் அறிவித்தார். கிராமப்புற சாலைகளை மேம்படுத்த உள்ளூர் நிர்வாக துறையால் 15.91 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜ் நிவாஸில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2021-22 ஆண்டிற்கான SCSP கீழ் ஐந்தாவது தவணை மானிய உதவி ₹1,77,333 அனுமதியளித்தார்.


மேலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் வயதானவர்களைப் பராமரிப்பதற்காகப் புதுச்சேரி அரசாங்கத்தால் வழங்கப்படும் 93.15 லட்சத்துக்கும் புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் அனுமதி வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News