Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் - ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டுகிறார் உள்த்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் - ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டுகிறார் உள்த்துறை அமைச்சர் அமித் ஷா!

JananiBy : Janani

  |  6 July 2021 4:39 AM GMT

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி பகுதியில் அமையவுள்ள புதிய சட்டமன்ற வளாகத்திற்கு ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் தலைமையில் அடிக்கல் நாட்டுவதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கியுள்ளது.


திங்களன்று அமைச்சர் A நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் அஷ்வனி குமார் மற்றும் பிற அமைச்சர்களுடன் நடந்த கூட்டத்தில், புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் R செல்வம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் புதிய சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளனர் மற்றும் சமீபத்தில் அவர்களை அழைத்து 300 கோடி மானியம் கோரியும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசாங்கத்திடம் ஒப்புதலைப் பெற்ற பின்பு முறையான முன்மொழிவு கடிதம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் மற்றும் நிதியைப் பெறுவதற்காக அனுப்பப்படும். இதற்கு இந்திய அரசு முழு நிதியுதவி அளிக்கும்.

சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் MLA-க்கள் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகம், பிற அரசு அலுவலகங்களை அமைப்பதற்காக 2 மாடி கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. இது 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இந்த கட்டிடத்தை 15 மாதத்திற்குள் முடிக்கவும் கணக்கிடப்பட்டுள்ளது.


ஆகஸ்ட் 15-இல் முதற்கட்ட பணியைத் தொடங்குவதற்காக பணியை விரைவு படுத்துவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது சட்டசபை வளாகத்தை அமைப்பதற்காக அந்த பகுதியில் பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News