புதுச்சேரிக்கு தற்பொழுதைய சூழலில் அதிகம் வருபவர்கள் யார்? - ஆளுநர் தமிழிசை கூறிய சுவாரசியம்
By : Thangavelu
புதுச்சேரி மாநிலத்திற்கு முன்பு வெறும் மது அருந்தத்தான் வருவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல், போட வருகிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரிகுறைக்கவில்லை, இதனால் விலை 100ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசியிருந்தார். அதாவது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் வைத்திருப்பது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை கொடுக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: புதுச்சேரிக்கு முன்பு மது அருந்தத்தான் வருவார்கள், ஆனால் தற்போது பெட்ரோல் போட வருகிறார்கள் என்றார். இவரது கருத்துக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Vikatan