"ஒருமுறை கூட தலித் கிறிஸ்தவர் 'பேராயராக' இருந்ததில்லை" - வெளிவரும் பகீர் உண்மைகள்
By : Dhivakar
புதுச்சேரி: புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டத்திற்கு, பேராயராக இதுவரை தலித் கிறிஸ்தவர் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதால் தலித் கிறிஸ்தவ சமுதாயம் கொதிப்பில் இருந்து வருகிறது.
'கிறிஸ்தவ சமுதாயத்தில், சாதி பாகுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என்று, பல தலித் அமைப்புகள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலுள்ள பல மறை மாவட்டங்களில் தலித் கிறிஸ்தவர்களை பேராயராக நியமிக்கப்படுவதில்லை என்ற தகவல் அக்குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கிறது.
புதுச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, தலித் 'கிறிஸ்தவர் விடுதலை இயக்கம்' சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அதில் " பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட புதுவை-கடலூர் மறை மாவட்டத்திற்க்கு, இதுவரை ஒரு தலித் கிறிஸ்தவர் கூட பேராயராக நியமிக்கப்படவில்லை, தலித் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு சம உரிமைகள் கிடைக்க, தலித் கிறிஸ்தவர்கள் ஆயர்கள் மற்றும் பேராயர்கள் பொறுப்பில் அமர வேண்டும்"
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'தலித் கிறிஸ்தவர்களுக்கு சம உரிமை வழங்காமல், கிறிஸ்தவ சமுதாயம் புறக்கணித்து வருகிறது' என்ற உண்மையை பொதுவெளிக்கு வெளிக் கொண்டுவர தமிழக செய்தி ஊடகங்கள் மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.