காணாமல் போன மாரியம்மன் ஆலய மர சிலை - திருடிய கும்பல் எது?
By : Dhivakar
காரைக்கால்: பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலய மர சிலை காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு தழுவிய நிலையில், இந்து சாமி சிலைகள் மற்றும் கோயில்கள் சேதப்படுத்தப்படுவதும், பழமை வாய்ந்த சிலைகள் திருடப்பட்டுவருவதுதும் வழக்கமாகி வருகிறது. இச் சம்பவங்களை தடுக்க அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும், இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன.
இதன் வரிசையில் புதுச்சேரி காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கோடீஸ்வர முடையார் கோயிலுக்குக் உட்பட்ட, அருள்மிகு ஸ்ரீ சீதலா மாரியம்மன் ஆலயத்தின் மிகப் பழமைவாய்ந்த மர சிலை ஒன்று காணாமல் போயுள்ளது. இதனை அறிந்த அக்கோவிலின் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக இந்து முன்னணியினர் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
"பழமையான சிலைகள் காணாமல் போவது ஆபத்தான அறிகுறி ஆகும். அவற்றை மீட்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்துமத உணர்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.