Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மத்திய கலாசாரத் துறையின் இசை, நடனம், நாடக திருவிழா...

புதுச்சேரி: மத்திய கலாசாரத் துறையின் இசை, நடனம், நாடக திருவிழா...
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Jun 2023 2:25 AM GMT

டெல்லி மத்திய கலாசாரத்துறையின் சங்கீத நாடக அகாடமி மற்றும் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறை சார்பில் புதுச்சேரியில் இசை நடனம் மற்றும் நாடகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி திடலில் கடந்த 16ஆம் தேதி இந்த ஒரு திருவிழா தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றிருக்கிறது.


விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி இருக்கிறார். "பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது, நாம் சுதந்திரம் அடைந்ததற்கு கலையின் பங்கு பெருமளவு இருந்தது. நாட்டில் இளைஞர்கள் மிக அதிகமாக உள்ளதால் நாட்டிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை அடைய வேண்டும். தீவிரமாக உள்ளதால் தான் நாம் இலக்கை அடைய முடியும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.


கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர்கள். புதுச்சேரி அரசின் நோக்கம் கலைஞர்களை ஊக்கப்படுத்தி கலைகளை வளர்ப்பது தான் என்றும், கலைகள் வளர வளர புதுச்சேரியும், இந்தியாவும் வளரும். புதுச்சேரி அரசு கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்து வருகிறது" என்று கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News