சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடியின் முயற்சியினால் நிகழ்ந்த அதிசயம்..
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள்.
By : Bharathi Latha
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பொருள்படக்கூடிய வசுதைவ குடும்பகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை மன்றத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உள்ளார்.
ஜபல்பூரில் குடியரசுத் துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் தலைமையில் இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் மிகச் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும். அந்தமான் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச யோகா தின விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று இருக்கிறார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் யோகா தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று பள்ளி குழந்தைகளும் யோகா செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் குறிப்பாக இந்த ஆர்வத்தை தூண்டியதற்கு மிக முக்கிய காரணமாக பிரதமர் மோடி அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
Input & Image courtesy: News