புதுச்சேரி: அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்த அதிகாரிகள்..
By : Bharathi Latha
அரியாங்குப்பம் மாதா கோவில் எதிரே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் வலுவிழந்து காணப்பட்ட தக்க தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர்நிலைப் பள்ளியின் அமைந்துள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பள்ளியை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் பார்வையிட்டார்.
மேலும் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் மேலும் புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளும், அந்த பகுதி எம்.எல்.ஏவும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்கள். அப்போது தற்காலிகமாக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் அமர்தேவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்குவது, வகுப்பறைகளை மாற்று இடத்தில் செயல்படுத்துவது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை சார்பில் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
Input &Image courtesy: News