Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: கடல் அரிப்பு குறித்து மத்திய அரசு சார்பில் சிறப்பு ஆய்வு..

புதுச்சேரி: கடல் அரிப்பு குறித்து மத்திய அரசு சார்பில் சிறப்பு ஆய்வு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 July 2023 6:15 AM GMT

புதுச்சேரி மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தந்து இந்த கூட்டத்தில் தலைமை தாங்கினார். இதில் துணை செயலாளர் இப்பட பல்வேறு அதிகாரிகள் இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்று இருக்கிறார்கள். கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


குறிப்பாக புதுச்சேரி பகுதிகளில் எந்திரம் பொருத்திய மற்றும் பொருத்தாத படகுகள் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாக இருக்கிறது. கடலில் மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் பெரும்பாலும் கடல் மணல் அரிப்பு பிரச்சனை காரணமாக தங்களுடைய படங்களில பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.


இவற்றுடன் ஆழ் கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்க தேவையான படகுகள், உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்தும் மீனவர் கிராமங்களையும் மத்திய மாநில அரசு மூலமாக செயல்படும் திட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News