கவர்னர் ஒப்புதலுக்காக மசோதா நிலுவையிலா... பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய கவர்னர் தமிழிசை...
By : Bharathi Latha
கவர்னரின் ஒப்புதல்களுக்காக எந்த ஒரு மசோதாவும் நிலுவையில் இல்லை என்று கவர்னர் தமிழிசை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அந்த அறிக்கையில் அவர் கூறும் பொழுது, தெலுங்கானாவில் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் திரும்பியது. குறிப்பாக தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பாக அதில் கூறப்படுவது ஒப்புதல் பெறுவதற்காக எந்த ஒரு மசோதாவும் என்னிடம் நிலுவையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தன்னிடம் ஒப்புதலுக்கு வந்த மசோதாக்களில் மூன்று மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், 2 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மீதமுள்ள மசோதாக்கள் அனைத்தும் அரசின் விளக்கம் மற்றும் தகவலுக்காக தற்போது அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தமிழிசை அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பல்வேறு நபர்கள் மசோதாக்கள் அனைத்தும் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவற்றை கவர்னர் முறையாக பரிசீலித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த ஒரு அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் மசோதாக்கள் தொடர்பான இந்த செய்தி வெளியிடுவதற்கு முன் கவர்னர் மாளிகையில் விளக்கம் பெற்ற வெளியீடுமாறு செய்தி நிறுவனங்களுக்கு அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News