ரயிலில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. உடனடியாக தலையிட்டு தீர்த்து வைத்த கவர்னர் தமிழிசை..
By : Bharathi Latha
சமீபத்தில் பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர். ஆனால் முன்பதிவு செய்தவர்களின் பெட்டிகளில் வட மாநிலத்தவர்கள் ஏறி இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
உடனே அந்த பெட்டியில் பயணித்த புதுவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் கவர்னர் தமிழிசையை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக கூறி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி இருக்கிறார். உரிய ஆதாரத்துடன் தகவல்கள் கிடைக்கப்பெற்ற பிறகு இதற்கு உடனடியாக கவர்னர் தமிழிசை அவர்கள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார். டெல்லியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதன் பின்னர் தகவலை அறிந்த அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, சிறிது நேரத்தில் அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் போலீசார் உதவியுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியிருந்தவர்களை கீழே இறக்கிவிட்டனர். அதன் பிறகு பயணிகள் நிம்மதியாக பலனிட்டார்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவிய கவர்னர் தமிழிசைக்கு அவர்கள் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy:News