புதுச்சேரி: சட்ட ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்.. அமைச்சர் பங்கேற்பு..
By : Bharathi Latha
புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரஜேந்திர குமார் யாதவ், பிரதிக்ஷா கோத்ரா, நாரா சைதன்யா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். அது மட்டுமில்ல அது இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் கூட்டத்தில் புதுவை மாநில சட்டம் -ஒழுங்கு பிரச்சினை, போக்குவரத்து நெரிசல், கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதுச்சேரி தற்போது மக்கள் தொகை அதிகமாக மாறிவரும் ஒரு யூனியன் பிரதேசமாக உருவெடுத்து வருகிறது சுற்றுலா துறையில் அதிக அளவில் கவனம் செலுத்தும் வகையில் போக்குவரத்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் களமிறங்கி இருக்கிறது.
கூட்ட முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறுகையில், இரவுநேர ரோந்து புதுவை மாநிலத்தில் சட்டம் -ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சினைகள், சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது, போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் காவல்துறையை நவீனப்படுத்துவது, பதவி உயர்வு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும், சட்டமன்றத்தில் காவல்துறை தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.
Input & Image courtesy: News