Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி போலீஸார் கொடுத்த எச்சரிக்கை.. இனி இதை செய்தால் ஆயிரம் அபராதம்..

புதுச்சேரி போலீஸார் கொடுத்த எச்சரிக்கை.. இனி இதை செய்தால் ஆயிரம் அபராதம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Aug 2023 11:01 AM GMT

காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார். மேலும் நாளுக்கு நாள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்து தொடர்பான விதிமீறல்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் விபத்துக்கள் அதிகளவில் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அவற்றை தடுக்கும் பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கிறது.


எனவே காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார். காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார் ஓட்டுவோர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டே செல்கின்றனர்.


இதன் காரணமாக பல்வேறு விபத்துக்கள் இந்த பகுதிகளில் அதிக அளவில் நடக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அது மட்டும் கிடையாது இவ்வாறு தவறுகளை செய்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களை பொதுமக்களை அடையாளம் கண்டு, 9489205307 என்ற whatsapp நம்பருக்கு காவல்துறைக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News