ஒரு வயது குழந்தைக்கு இலவச இதய அறுவை சிகிச்சை.. புதுவை கலெக்டரின் நெகிழ்ச்சியான செயல்..
By : Bharathi Latha
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கவர்னர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின் பெயரில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதம் தோறும் 15 ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்று மக்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் தங்களுடைய தீராத குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்து அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் புதுச்சேரி காரைக்காலில் நடைபெற்ற முகாமில் மதுரை மாவட்ட குழு துவங்கும் தலைமை தாங்கினார். மாவட்ட சீனியர் போலீஸ சூப்பிரண்டு ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். கூட்டத்தில் கடந்த மாதத்தில் பெறப்பட்ட 102 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் சதாம் உசேன் என்பவர் தன்னுடைய ஒரு வயதான பெண் குழந்தைக்கு இதயத்தில் ஓட்ட இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் இல்லாமல் தங்கள் தவிர்த்து வருவதாகவும் அவர்களுக்கு அரச சார்பில் உதவியை ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை மனுவாக எழுதிக் கொடுத்தார்.
இவற்றை அறிந்த கலெக்டர் அவர்கள் உதவுவதாக சிகிச்சைக்கு உதவுவதாக கூறியிருக்கிறார். குறிப்பாக ஒரு ரூபாய் செலவு இல்லாமல் குழந்தைக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட கலெக்டர் மேற்கொண்டு இருப்பது பாராட்டுத்தக்கது என்றும் பொதுமக்கள் கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News