புதுச்சேரி: பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்பக் கலைஞர்.. ஆர்வமாக பயிலும் துருக்கி மாணவர்கள்..
By : Bharathi Latha
புதுச்சேரியை பொருத்தவரை சுற்றுலாவிற்கு மட்டும் பெயர் பெற்றது அல்ல கல்வியை புகட்டுவதிலும் புதிது புதிதாக கற்பிப்பதிலும் பெயர் பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் புதுச்சேரியில் நோக்கி வருகை தருகிறார்கள் என்றால், அது முக்கிய அங்கம் கல்விக்கு என்று கூறலாம். அந்த வகையில் தற்பொழுது சுடுமண் சிற்பம் செய்வது எப்படி? அவை எவற்றை உருவாக்குவது? என்பது தொடர்பாக அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் நாம் புகட்ட வேண்டும் என்று நோக்கில் சுடுமண் கலைஞர் பயிற்சி அளித்து வருகிறார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் சிற்ப கலைஞரான முனுசாமி கணுவாய்ப்பேட்டையில் தனி பயிற்சிகூடம் அமைத்து சிற்ப பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் வெளிநாட்டவர் பலரும் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த ஒரு சமயத்தில் துருக்கி நாட்டில் இருந்து மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக திருச்சிற்றம்பலத்திற்கு வருகை தந்து இருக்கிறார்கள். அங்கு தங்கி இருந்த அவர்கள் கல்வி மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் தான் அவர்கள் முனுசாமியிடம் சுடுமண் சிற்பம் தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயிற்சியும் பெற்று வருகின்றனர். அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை வெளிநாட்டு மாணவர்களுக்கு கற்று தருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த தலைமுறைக்கும் இந்த கலையை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News