Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: ஒருவருடம் கழித்து மீண்டும் தொடங்கியது மதிய உணவுத் திட்டம்.!

புதுச்சேரி: ஒருவருடம் கழித்து மீண்டும் தொடங்கியது மதிய உணவுத் திட்டம்.!

JananiBy : Janani

  |  3 March 2021 2:00 AM GMT

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும் இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடம் கழித்து மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 இல் இருந்து பள்ளிகள் செயல்படத் தொடங்கினாலும், மதிய உணவு வழங்கப்படவில்லை.



புதன்கிழமையிலிருந்து புதுச்சேரியில் முழு நேரமும் பள்ளிகள் செயல்படவுள்ள நிலையில் மதிய உணவுத் திட்டம் மீண்டும் தொடங்கப்படுகின்றது. செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் தனது ஆலோசகர்களுடன் புதுச்சேரி கிராமப் புறத்தில் உள்ள காளிதீரல்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிடச் சென்றார்.

மேலும் அவர் பள்ளிகளில் வழங்கும் மதிய உணவையும் ஆய்வு செய்தார். அவரும் அதனை ருசித்து மாணவர்களிடமும் அதுகுறித்து கேட்டறிந்தார். மேலும் உணவு சத்தானதாக இருப்பது குறித்து நிறைவடைந்தார். மேலும் சமையலறை தூய்மை, பொருட்கள் இருப்பு மற்றும் அதன் தரம் செய்தார்.




யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 70,000 பள்ளி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அதன் பிறகு மாலையில் கடற்கரைச் சாலையில் சுகாதாரத் துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News