Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை!

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை!

G PradeepBy : G Pradeep

  |  3 March 2021 11:35 AM GMT

புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8ம் தேதி புதுவையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கும் வகையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.


இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 17 ந் தேதி இளங்கலை, முதுகலை படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டது. 1, 3, 5, 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி கிழமைகளிலும், 2, 4, 6, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு வெளியிட்டுள்ள உத்தரவில், "புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் இன்று முதல் முழு நேரமும் செயல்படும் என்றும் வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12ம் வகுப்புகள் அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்படும்" என்றும் அறிவித்திருந்தார்.


அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் வழங்கும் திட்டம் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. தமிழிசை பொறுப்பேற்றதில் இருந்து இந்த திட்டம் செயல்படும் என தெரிவித்திருந்தார் அதன்படி இன்று அரசு பள்ளிக்கு வந்த துணைநிலை ஆளுநர்

தமிழிசை சொளந்தரராஜன் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்

கொரோனா தொற்று இருக்கும் நிலையில் புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா, தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளதாகவும் அதன்படி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக செய்த தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News