Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களை குழப்பும் வகையில் மதசார்பற்ற கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை தலைமை ஏற்க தி.மு.க அழைப்பு?

மக்களை குழப்பும் வகையில் மதசார்பற்ற கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை தலைமை ஏற்க தி.மு.க அழைப்பு?
X

G PradeepBy : G Pradeep

  |  6 March 2021 7:52 AM IST

புதுச்சேரியில் பாஜக என்.ஆ.காங்கிரஸ் கூட்டணியிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைநடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உங்கள் தேவையை எங்கள் வாக்குறுதி என்ற பிரச்சார வாகனம் பேரணியானது புதிய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை முன்பு தொடங்கப்பட்டது. இதில் பாஜக இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா , ராஜி சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியை புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மக்களை குழப்ப என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க

திமுக அழைப்பு விடுத்துள்ளது என்றும் மக்கள் நலன் கருதி ரங்கசாமி பாஜக கூட்டணியில் தொடர்வார் என்றும் இதற்கான விடை 24 மணி நேரத்தில் தெரியவரும் என தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News