Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு!

புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள்  ஆய்வு!

JananiBy : Janani

  |  8 March 2021 1:00 AM GMT

புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வேலைகளும் பரபரப்புடன் நடந்து வருகின்றது. சனிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரும் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான(DEO) பூர்வ கார்க், லாஸ்பேட் பகுதியில் அமைத்துள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடு நடவடிக்கை குறித்துப் பார்வையிட்டார்


புதுச்சேரியில் உள்ள அனைத்து 23 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் லாஸ்பேட் பகுதியில் அமைத்திருக்கும் இந்த மூன்று மையங்களே ஆகும். ஓபலம், ஆர்லியம்பேத், முடலியர்பேத், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம் மானவேலி, எம்பலம், நெட்டப்பாக்கம் மற்றும் பாஹூர் பகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகும்.

மண்ணாடிப்பெட், திருபுவாணி, ஒஸ்ஸுடு, மங்களம், வில்லியனுர், கண்டீர்காமம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு என்னும் மையங்கள் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியாக இருக்கும்.

மீதமுள்ள ஐந்து சட்டமன்ற பிரிவுகளான காமராஜ் நகர், முதியல்பேட்டை, ராஜ் பவன், லாஸ்பேட் மற்றும் கலப்பேட்டை உள்ளிட்ட வட்டிற்கு தாகூர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையங்களாக இருக்கும் என்று புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் அலுவலக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மையங்களிலும் செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து, பொது ஊழியர்கள், காவல்துறை, மின்சார மற்றும் LAD துறை அதிகாரிகளுடன் Ms கார்க் ஆலோசனை நடத்தினார். அந்த அறிக்கையில், மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டியிருந்தது.


மேலும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஸூபீர் சிங் வெளியிட்டிருந்த மற்றொரு அறிக்கையில், ஓய்வுபெற்ற IAS அதிகாரி மன்ஜீத் சிங், ஓய்வுபெற்ற IPS அதிகாரி தர்மேந்திரா குமார் மாற்றும் ஓய்வுபெற்ற IRS அதிகாரி மகா மகாஜன் மற்றும் B.R பாலகிருஷ்ணன். ஆகியோரை சிறப்புப் பார்வை அதிகாரிகளாக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News