Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி தேர்தல் கருத்துக்கணிப்பு: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு!

புதுச்சேரி தேர்தல் கருத்துக்கணிப்பு: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு!

JananiBy : Janani

  |  9 March 2021 12:45 AM GMT

புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்திய டைம்ஸ் நொவ், மொத்தம் 30 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி( NDA) ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.



கருத்துக்கணிப்பின் படி, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளில் வெல்லக்கூடும். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 இல் நடைபெறும். 2016 சட்டமன்ற தேர்தலில் NDA 12 இடங்களில் வெற்றிபெற்றது.

இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி(UPA) 12 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறியுள்ளது. கணக்கெடுப்பின் படி, முற்போக்கு கூட்டணி 10 முதல் 14 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற வேட்பாளர்கள் புதுச்சேரியில் ஒரு இடங்களைப் பிடிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 இல் காங்கிரஸ் மற்றும் DMK வுடனான கூட்டணி 17 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று வெற்றியைப் பதிவு செய்தது.


மேலும் புதுச்சேரி முதலமைச்சர் பா.ஜ.க வை சேர்ந்தவராக இருப்பார் என்று அமித்ஷா அறிவிப்புக்குப் பின்னர், AINR காங்கிரஸ் தலைவர் N ரங்க ஸ்வாமி வருத்தத்தில் இருப்பதால் கொஞ்சம் சிக்கலாக உள்ளது. AINR தனியாகப் போட்டியிட எண்ணினால் புதுச்சேரியில் நான்கு போட்டியாக அமையும் இது UPA சாதகமாக மாறிவிடும்.

NDA 45.8 சதவீத வாக்கு பங்கை வைக்க வாய்ப்புள்ளது, இது 2016 இல் 30.5 சதவீதத்தில் 14.0 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் UPA யின் வாக்கு சதவீதத்தில் 1.9 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது, இது 2016 இல் 39.5 சதவீதமாக இருந்தது 2021 இல் 37.6 சதவீதமாக உள்ளது.


புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் N ரங்க ஸ்வாமி முதலமைச்சர் வேட்பாளர்களுக்கு விருப்பமான வேட்பாளராக உள்ளார். கருத்துக்கணிப்பில் தற்போது ராஜினாமா செய்த முன்னாள் புதுச்சேரி முதல்வர் V நாராயண ஸ்வாமி மக்கள் இரண்டாவதாக விரும்பும் வேட்பாளர் ஆவார்.கருத்துக்கணிப்புக்குப் பதிலளித்த 33 சதவீதம் பேர் மாநில அரசாங்கத்தின் செயலில் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News