Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெறாத முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி பெயர்!

புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெறாத முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி பெயர்!

JananiBy : Janani

  |  18 March 2021 1:00 AM GMT

புதுச்சேரியில் ஏப்ரல் 6 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அன்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. ஆனால் அந்த வேட்பாளர்களில் பட்டியலில் முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் V நாராயண ஸ்வாமி பெயர் இடம்பெறவில்லை.




ஐந்து காங்கிரஸ் மற்றும் ஒரு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பெப்ரவரி 22 இல் 33 பேர் கொண்ட சட்டசபையில் நாராயண ஸ்வாமி ராஜினாமா செய்தார்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்குக் காங்கிரஸ் புதுச்சேரியில் தலைமை தாங்குகிறது. மேலும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. மேலும் கூட்டணிக் கட்சிகளான திமுக 13 தொகுதிகளிலும் மற்றும் பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர். வழக்கமாக நாராயண ஸ்வாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதி இம்முறை திமுக பிடித்துக்கொண்டது.

புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் இடம்பெறாத முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி பெயர்.!


காமராஜ் நகர் தொகுதியில் MOHF ஷா ஜஹான், காரைக்காலில் A V சுப்பிரமணியம், எம்பலம் தொகுதியில் M கந்தஸ்வாமி மற்றும் திருநல்லூர் தொகுதியில் R கமலக்கண்ணன் போட்டியிடவுள்ளனர். இதற்கிடையில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ரங்கஸ்வாமி அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 6 இல் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 இல் நடைபெறவுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News