கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுத் தேர்வு ரத்துசெய்ய உத்தரவா - உண்மை என்ன ?
By : Janani
மீண்டும் தற்போது அதிகரித்து வரும் தொற்றுநோயால், பிரதமர் மோடி அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை மூடவும் மற்றும் அனைத்து தேர்வினை ரத்து செய்து ஒரு ஆணை பிறப்பித்தது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த புகைப்படமானது தற்போது மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுவரும் செய்தி தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசாங்கத்தின் உண்மை கண்டறியும் குழுவான PIB, அரசாங்கம் இதுபோல் ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என்பதைத் தெரிவித்துள்ளது. தற்போது வைரலாகி வரும் செய்தியைப் போலி என்று கூறி, தேர்வுகளை ரத்துசெய்யக் கோரி மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவில்லை மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்த முடிவுகள் மாநில அரசாங்கம் எடுத்துள்ளது என்பதைத் தெரிவித்தது.
இந்த செய்தி தொடர்பாக ட்விட் செய்த PIB, "சமூக வலைத்தளத்தில் கல்விக் கூடங்கள் மூடப்பட்டுத் தேர்வுகள் ரத்து செய்வது போன்ற புகைப்படம் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் இதுபோன்ற ஒரு முடிவை மத்திய அரசாங்கம் எடுக்கவில்லை," என்பதைத் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பரில் இருந்து இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 35,871 பேருக்குத் தொற்றுநோய் பரவியுள்ளது. தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி மாநில அமைச்சர்களுடன் சந்திப்பை மேற்கொண்டார், மேலும் கொரோனா தொற்றுநோயின் இரண்டாம் அலை கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொண்டார்.