புதுச்சேரி சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கவுள்ள காரைக்கால் மீனவர்கள்.!
By : Janani
புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஐந்து தொகுதியில் இருக்கும் மீனவர்கள் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஏப்ரல் 6 இல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
காரைக்கால் ஒரு கடலோர பகுதி என்பதால் அங்கு உள்ள மீனவர்களின் வாக்குகள் பெரும் பங்கினை பெறுகின்றது. இது புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். மேலும் இது தமிழகத்துடன் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது.
மீனவரும் மற்றும் மீனவர்கள் சங்கத் தலைவருமான ஜான் ஜெரி, "வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.குடிநீர் வசதிகள் தவிர, சாலை வசதி மற்றும் மீன்பிடிக்கக் கூடுதல் வசதிகளைச் செய்துதரக் கூறியிருந்தோம் அது நிச்சயம் நிறைவேற வேண்டும்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் காரைக்காலில் உள்ள பெண்களும் வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
மேரி தெரசா என்ற காரைக்கால் நெடுங்கண்டம் தொகுதியைச் சேர்ந்த மீனவர், "ஒருவொரு முறையும் தேர்தல் சமயம் அனைத்து கட்சி ஆளுங்களும் பெரியா சிரிப்புடன் எங்களைச் சந்திப்பர் மற்றும் மீண்டும் அடுத்தமுறை தேர்தல் அன்றே1 சந்திக்கவருவர். இம்முறை எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை. எங்களுக்குக் குடிநீர், சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் வசதிகள் கூட இல்லை," என்று குற்றம்சாட்டினார்.
இந்த பிரச்சாரத்தை ஐக்கிய மீனவர்கள் சங்கம் தலைமை தாங்குகிறது. இந்த பிரச்சாரத்தால் அரசியல் கட்சிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய AIADMK தலைவர் K R ராமலிங்கம், "நாங்கள் அவர்களின் தலைவர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் மற்றும் AIADMK எப்பொழுதும் மக்களுக்காகச் செயல் படுகின்றது மற்றும் தற்போது இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளிக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் காரைக்கால் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் V நாராயணசாமி," இவர்களின் கோரிக்கையைத் தீர்க்க அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். மற்றும் மீனவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம், அவர்கள் எனது ஆதரவாளர்களால் எங்களுக்கு இடையில் சிறிய பிரச்சனையே ஏற்பட்டுள்ளது விரைவில் சரிசெய்வோம்," என்று அவர் தெரிவித்தார்.