புதுச்சேரி: பெண்கள், மாணவர்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள பா.ஜ.க தேர்தல் அறிக்கை!
By : Janani
புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் யூனியன் பிரதேசத்தில் பெண்களை அதிகரிப்பது, கல்வித் தகுதியை மேம்படுத்துவது, ஆன்மிக மையமாக மாற்றுவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க மற்றும் AINRC கூட்டணியாக இணைந்து போட்டியிட உள்ளது.
தேர்தல் அறிக்கையானது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. அதில் KG முதல் PG வரை பெண் குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வி வழங்குவது மற்றும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் கடன் பெற்றுப் பாதிப்படைந்தவர்களுக்குக் கடனை தள்ளுபடி செய்வதாகவும் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்குவது, இலவச சுகாதார மையம் மற்றும் பொது இடங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை அமைப்பு குறித்தும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான நீண்டகால கோரிக்கையும் நிறைவேற்றப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யூனியன் பிரதேசத்தை ஆன்மிக மையமாக மற்றும் முக்கிய நோக்கில், வழிபாட்டுத் தளங்களில் இருக்கும் நன்கொடைகளையும் அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து அகற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சர்வதேச கலாச்சார மற்றும் ஆன்மிக விழாவை நடத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறை குறித்துப் பேசுகையில் புதிய சுற்றுலா தளங்களை உருவாக்குவதாகவும் மற்றும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை வைப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. மேலும் 2.5 லட்சம் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதாகவும், IT பாரக்ஸ், புதுச்சேரி விமான நிலையத்தைப் புதுப்பிப்பது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடையே ஹெலிகாப்டர் சேவையை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.