புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பதை இலக்காக வைத்துள்ள மத்திய பா.ஜ.க தலைமை.!
By : Janani
புதுச்சேரியில் NDA கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க, NR காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதால் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றது.
வரவிற்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளில் மகத்தான வெற்றியை NDA கூட்டணி பெரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டணி கண்டிப்பாக மகத்தான வெற்றியைப் பெற்று புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏப்ரல் 6 ஒரே கட்டமாகப் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து இந்திய NR காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி 9 தொகுதிகளிலும் மற்றும் மீதமுள்ள 5 தொகுதிகளில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவுள்ளது.
NDA கூட்டணி AINRC தலைவர் N ரங்கசாமி அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. 30 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்ற பா.ஜ.க சார்பாக ஒரு வேட்பாளரும் இல்லை என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவை வழங்கியுள்ளது.
NDA கூட்டணி சார்பாகத் தேர்தல் அறிக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களால் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் இரானி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அன்று NDA கூட்டணி சார்பாகப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
"AINRC தலைவர் ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக உள்ளார், அவர் மாநிலத்தின் உள்ளேயும் வெளியும் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளார். NDA கூட்டணி பெருமளவில் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைக் காண்போம்," என்று புதுச்சேரி பா.ஜ.க தலைவர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.