புதுச்சேரியில் தடுப்பூசி திட்டம் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிப்பு!
By : Janani
செவ்வாய்க்கிழமை அன்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், தற்போது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடத்தப்படும் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பிரச்சாரத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்த நான்கு நாட்கள் தடுப்பூசி பிரச்சாரத்தின், மக்களின் பங்கேற்பு அதிகளவில் இருந்ததாக சௌந்தர ராஜன் தெரிவித்தார். முதல்நாள் பிரச்சாரத்தின் போது 7,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர், இரண்டாவது நாளில் 10,000 பேரும் மற்றும் மூன்றாவது நாளில் அதைவிட அதிகமாக எண்ணிக்கை உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பானது உகாடி பண்டிகையை முன்னிட்டு ராஜ் பவனில் வைத்து தெலுங்கானா ஆளுநராகவும் பணியாற்றும் தமிழிசை சௌந்தர ராஜன் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.
"தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பற்றாக்குறை பற்றி அடுத்த நாள் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தின் போது பேசப்பட்டது. கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை காரணமாகப் புதுச்சேரியில் இருந்து செல்ல திட்டமில்லை. தெலுங்கானா மக்களின் கோரிக்கைக்குப் பிறகு அவர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளேன். மேலும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்ட ரெம்தேசிவிரின் அத்தியாவசிய பங்கினை தந்ததற்காகத் தெலுங்கானா முதல்வருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர், பற்றாக்குறையைப் பயன்படுத்தி தடுப்பூசி மருந்தினை அதிகளவிற்கு விற்கும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் ஆன்டிவைரல் மருந்தினை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் அவர் தற்போது புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை விரைவு படுத்த மத்திய அரசு வழங்கிய ஒரு லட்சம் தடுப்பூசி உதவியதாகக் கூறி நன்றியைத் தெரிவித்தார்.
source: https://www.thehindu.com/news/cities/puducherry/vaccination-programme-extended-by-4-days-l-g/article34315557.ece