Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 'ஆல் பாஸ்'.!

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ்.!

JananiBy : Janani

  |  12 March 2021 6:13 AM GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வகுப்புகள் முழுமையாகச் செயல்பட மார்ச் மாதத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் "ஆல் பாஸ்" என்று அறிவிப்பதற்காக அறிக்கைக்கு லெப்டினன்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் வியாழக்கிழமை அன்று அனுமதியளித்துள்ளார்.




யூனியன் பிரதேசத்தில் ராஜ் நிவாஸில் இருந்து வெளிவந்த அறிக்கை, LT கவர்னர் 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் அனைவர்க்கும் ஆல் பாஸ் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி வாரியத்தின் உத்தரவுப் படி. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.

அனைத்து பள்ளிகளும் மார்ச் 31 வரை 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு வாரம் ஐந்து நாட்கள் பள்ளிகள் செயல்படும். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகின்றது. கோடைக்கால விடுமுறை ஏப்ரல் 1 இல் இருந்து தொடங்குகின்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலத்தின் தேர்வு அட்டவணையின் படி செயல்படும். மேலும் அந்த அறிக்கையில் மாதந்தோறும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவித் தொகை வழங்க Lt கவர்னர் உத்தரவளித்து 29.65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.




இந்த திட்டத்தின் கீழ் 1.54 லட்ச நபர்கள் பயன்பெறுகின்றனர். மேலும் ஏப்ரல் 6 இல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 4 முதல் 6 வரை செயல்படும் மதுபான கடைகள், பார்கள், கிளப்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றை மூடவும் உத்தரவளித்துள்ளார். இந்த கடைகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 மற்றும் 3 ஆகிய நாட்களிலும் மூடப்பட்டிருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News