Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மே 10 முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்க உத்தரவு!

புதுச்சேரி: மே 10 முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்க உத்தரவு!
X

JananiBy : Janani

  |  9 May 2021 7:21 AM GMT

புதுச்சேரியில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, அதன் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே கட்டுப்பாடுகள் பிறப்பித்திருந்த நிலையில் மீண்டும் மே 10 முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.


ஏற்கனவே இரவு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அதற்குக் கூடுதலாக தற்போதைய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்க செயலாளர் அசோக் குமார் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசத்தில் கொரோனா பரவலைத் தடுக்க வேறு வழியில்லை என்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். "மே 10 நடு இரவில் இரவில் மே 24 வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஊரடங்கு நாட்களில் கடற்கரை, பூங்கா, வழிபாட்டுத் தளங்கள் முதலியவை பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பூட்டிவைக்கப் பட்டிருக்கும். பெட்ரோல் நிலையங்கள், மின்சார சேவை நிலையங்கள் செயல்படும் மற்றும் வங்கிகள் மதியம் 12 மணி வரை செயல்படும். தொழில் மற்றும் தொழில்துறைக்கான உற்பத்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, வீட்டில் இருப்பதைக் கடைப்பிடிக்குமாறும் அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நடமாட்டங்கள் கண்காணிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ஏசி வசதிகள் இல்லாமல் காய்கறிகள், பழக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மதியம் 12 வரை செயல்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

டீ கடைகள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள் விநியோகிப்பது, உணவு டெலிவரி செய்வது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாக்ஸி மற்றும் ஆட்டோ பயணங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


திருமண நிகழ்ச்சிகளுக்கு 25 பேர் பங்கேற்கவும் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு 20 பேர் பங்கேற்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: https://www.firstpost.com/india/lockdown-in-puducherry-from-10-to-24-may-shopping-complexes-malls-to-remain-shut-9604881.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News