புதுச்சேரி: முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.!
By : Janani
சனிக்கிழமையில் இருந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து செய்தியாளர்களிடம் உரையாடிய அவர், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த முதற்கட்டமாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் தானாகவே முன்வந்து அதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்காக முதலில் அபராதம் விதிப்பதே முதற் படியாகும், மேலும் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் நிர்வாகம் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படும் என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை இரவில் இருந்து 12 முதல் காலை 5 வரை மக்கள் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 முதல் 15 வரை யூனியன் பிரதேசத்தில் 100 இடங்களில் பெரியளவில் தடுப்பூசி மற்றும் கொரோனா சோதனை நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்த பொதுச் சுகாதார மையங்களில் மூன்று ஷிப்ட்டில் செயல்படும்.
கடைகள், மால்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசத்தை அணிந்திருப்பதை உறுதி செய்ய அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு சானிடைஸிர்களை வழங்கவும் உறுதி செய்தார். உணவகங்கள் மற்றும் ஹோட்டலில் 50 சதவீத பேரை அனுமதிக்க Lt கவர்னர் கேட்டுக்கொண்டார்.
கோவில்கள் இரவு 8 மணிவரை செயல்படும். கோவில் நிர்வாகம் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யக் கேட்டுக்கொண்டது. பொது மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகள் உள்ள அளவே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் தடுப்பூசி திட்டத்தையும் ஆய்வு செய்தார்.
source: https://www.thehindu.com/news/cities/puducherry/rs-100-fine-for-not-wearing-mask-in-puducherry/article34279513.ece