புதுச்சேரி: தீபாவளி சர்ப்ரைஸாக ரூபாய் 1000 வழங்க அரசு முடிவு..
By : Bharathi Latha
புதுச்சேரியில் தற்பொழுது பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சர் ரங்க சாமி அவர்கள் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக புதுச்சேரியில் செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலையாகி, இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1-ம் தேதி அம்மாநிலத்தில் விடுதலை நாள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, கலந்து கொண்டு பேசினார்.
அதன்படி நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரியில் புதுச்சேரி விடுதலை நாளாக சிறப்பாக பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் கிடையாது அந்த ஒரு நாளில் தான் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புதுச்சேரி மக்களுக்கு அதிரடியாக ஒரு சர்ப்ரைசையும் வெளியிட்டு இருக்கிறார். புத்தாண்டு தொடங்கியவுடன் பொங்கலுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி மற்றும் சேலைகள் ரேஷன் கடை மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்பொழுது, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களின்போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.
Input & Image courtesy: News