புதுச்சேரி: ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்...
By : Bharathi Latha
புதுச்சேரி மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பல்வேறு நீதிகளையும் புதுச்சேரி யூனியனுக்கு ஒதுக்கி நலத்திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற செயலாற்றி வருகிறது. அந்த வகையில் பொது பணித்துறை சார்பாக 11 லட்சம் மதிப்பில் தற்பொழுது புதிதாக கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.
வில்லியனூர் பத்மினி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, பொதுப்பணித்துறை பொது சுகாதார அமைப்பின் மூலம் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளுக்குக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் தொகுதியின் எம்.எல்.ஏ. சிவா கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து உள்ளார்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறைவு பெற்று அவை பயன்பாட்டிற்கு வரும் பொழுது, ஒரு நாளைக்கு 20 லிட்டர் கேன் மூலம் 400 கேன்களில் 8 ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு கேன் ரூ.7 என்ற அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இந்த ஒரு பொது நிகழ்ச்சியின் போது பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தொகுதி மக்களுக்கு இந்த ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இனி தாராளமாக தண்ணீர் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News