புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளை மூட உத்தரவு!
By : Janani
நாடுமுழுவதும் மீண்டும் கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருவதால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 1 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தமுடிவானது CBSE, ICSE மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் பொருந்தும்.
இந்த முடிவானது தற்போது யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுப் பாதிப்பினால் எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வி இயக்குநர் P T ருத்ர கௌட் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவானது மார்ச் 18 இல் நடைபெற்ற கூட்டத்தில் உயர்மட்ட தடுப்பூசி செலுத்தும் குழுவின் பரிந்துரையை அடுத்து எடுப்பாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி லெப்டினென்ட் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதுச்சேரியில் தற்போது தொற்றுநோய் பரவல் குறித்தும் மற்றும் பள்ளிகளை மூடும் உத்தரவு குறித்தும் பேசப்பட்டது. இந்நிலையில் ஒன்பது, பத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மார்ச் 11 இல் புதுச்சேரியில் 1 முதல் 9 வரையுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் "ஆல் பாஸ்" அறிவித்து லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் உத்தரவிட்டார். பத்து மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் தமிழ்நாடு கல்வி வாரியம் சார்பாக ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.