Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மகளிர் மேம்பாட்டு சொத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு.. இதன் மதிப்பு 3 கோடியா?

புதுச்சேரி: மகளிர் மேம்பாட்டு சொத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு.. இதன் மதிப்பு 3 கோடியா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 July 2023 1:58 AM GMT

புதுச்சேரியில் தற்பொழுது 3 கோடி மதிப்புமிக்க மகளிர் மேம்பாட்டு கழக நிலம் ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இங்கு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கடைகளை கட்டி வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது அந்த அக்கிரமிப்பு சொத்து அரசு வசம் சென்று இருக்கிறது. புதுச்சேரி சாரம் வெங்கடேஸ்வரா நகரில் மகளிர் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான 1,450 சதுர மீட்டர் நிலம் உள்ளது.


இந்த நிலத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்ட திட்டமிடப் பட்டிருந்தது. வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி இருந்தது. ஆனால் அதே பகுதியை சேர்ந்த நாகமணி என்பவர் இது தங்களுடைய முன்னோர்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி சுமார் அந்த இடத்தில் மூன்றுக்கு இரண்டு பங்கு ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.


குறிப்பாக அந்த இடத்தில் இரண்டு கடைகளையும் கட்டி காம்பவுண்ட் அமைத்து வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்று கோடி மதிப்புமிக்க அந்த ஒரு இடத்தை மீட்கும் விதமாக மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, நிலம் மகளிர் மேம்பாட்டு கழத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News