புதுச்சேரி: தேர்தல் பிரச்சாரத்துக்கு மார்ச் 30 வருகைதரவுள்ள பிரதமர் மோடி!
By : Janani
புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்கள் பரபரப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகப் பிரச்சாரத்தை நடத்த மார்ச் 30 இல் புதுச்சேரிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக பா.ஜ.க பொதுச் செயலாளர் R செல்வம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், ஆங்கிலோ-பிரென்ச் டெஸ்ட்டைல் மைதானத்தில் வைத்து மார்ச் 30 5 மணிக்கு மக்கள் பொதுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். இது கடந்த 30 நாட்களில் சட்டமன்ற தேர்தலுக்காகக் கட்சி மற்றும் கூட்டணிகள் சார்பாகப் பிரதமர் உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும்.
புதுச்சேரியை ஒரு முறைக்கு மேலாக வருகை தரும் முதல் பிரதமர் மோடி ஆவார். முதன் முறையாகப் பெப்ரவரி 28 2018 இல் ஆரோவில்லிஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். கடைசியாக இந்த ஆண்டு பெப்ரவரி 25 இல் புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
மார்ச் 22 இல் கட்சி மற்றும் கூட்டணிகள் சார்பாக வாக்குகளைச் சேகரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதே நேரத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 24 இல் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகை கௌதமி மன்னடிப்பேட்டை மற்றும் லாஸ்பேட் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக வாக்குகளைச் சேகரிக்கப் பேரணியை மேற்கொள்ளவுள்ளார்.
புதுச்சேரியில் பா.ஜ.க சார்பாக, முந்தைய அரசாங்கமான காங்கிரஸின் குறைபாடுகள் மற்றும் அதன் வாக்குரியத்தை செய்யத் தவறியது போன்ற மக்கள் குற்றப்பத்திரிகையை வெளியிட்டது.