புதுச்சேரி முதல்வர் அசத்தல்! அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி - எவ்வளவு தெரியுமா?
By : Janani
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அனைத்து குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ₹3000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தணிக்க இந்த தொகை வழங்கப்படுவதாக ரங்கசாமி எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியிடபட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது "புதுச்சேரியில் 3,50,000 ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்க ₹105 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது"
கடந்த சில நாட்களாக அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் தலைவர்களும் மக்களுக்கு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி வந்தனர். குறிப்பாகத் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கும் மற்றும் ஊரடங்கு காரணமாக வருமான இல்லாதவர்களுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இந்த தட்டுப்பாடு காலங்களில் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள், காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களைப் பொட்டலம் போட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் வழங்கி வந்தனர்.
Source: New Indian Express