Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி அமைச்சரவையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் அமைச்சர்!

புதுச்சேரி அமைச்சரவையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் அமைச்சர்!

JananiBy : Janani

  |  1 July 2021 7:45 AM GMT

புதுச்சேரி அமைச்சரவையில் 41 ஆண்டுகளில் முதல்முறையாக முதல் பெண் அமைச்சராக சைந்திர பிரியங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இது தற்போது ரங்கசாமி முதல்வராகவும் மற்றும் பிரியங்கா 41 ஆண்டுகளில் முதல் பெண் அமைச்சராக இருப்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.


கடைசியாக 1983 இல் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் புதுச்சேரி அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் ரேணுகா அப்பாதுரை ஆவார். இவர் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

கூட்டணி என்பதால் பிரியங்கா அமைச்சராக இருப்பார் என்று எதிர்ப்பாக்கவில்லை மற்றும் அமைச்சரவையில் 33 உறுப்பினர்கள் அனைவரும் ஆண்கள். இது AINRC பெண்களை மதிக்கும் என்ற செய்தியை வலுவாகத் தெரிவிக்கும் வகையில் பிரியங்கா சேர்க்கப்பட்டுள்ளார். முதல்வர் ரங்கசாமி தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அவரின் தலைமையின் கீழ் கடுமையாக உழைப்பேன் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பிரியங்காவைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் A நமச்சிவாயம் மற்றும் AK சாய் J சரவணா குமார் ஆகியோரும் பிரமாணம் செய்து கொண்டனர்.


"இந்த வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமை அடைகிறேன். இது எனக்குக் கிடைத்த வாய்ப்பு மட்டும் இல்லை, அனைத்து பெண்களுக்கும் கிடைத்தது. அரசியலில் மட்டும் கிடையாது, அனைத்து துறையிலும் வெற்றியை அடைவதற்குப் பெண்கள் பல கடினங்களைக் கடந்து செல்லவேண்டும். 30 MLA களில் எனக்கு இடம் கிடைத்திருப்பது பெரிய வெற்றி. இந்த இளம் வயதில் எனக்கு 41 ஆண்டுகளை முதன் முறையாகப் பெண் அமைச்சராக வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய வாய்ப்பு. ஒரு அமைச்சராக எனது பணி என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பெருமை சேர்க்க விரும்புகிறேன்," என்று பிரியங்கா தெரிவித்தார்.

source: https://newsable.asianetnews.com/india-politics/first-time-after-4-decades-puducherry-gets-woman-minister-in-cabinet-ycb-qvi38w

Next Story
கதிர் தொகுப்பு
Trending News