புதுச்சேரி: கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 குறைப்பு.. முதலமைச்சர் அறிவிப்பு..
By : Bharathi Latha
மத்திய அரசு தற்பொழுது சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக மாற்றம் இல்லாமல் இருக்கும், கேஸ் சிலிண்டர்கள் விலை குறைப்பு குடும்ப தலைவர்களை நிம்மதி பெரும் மூச்சு வைக்க விட்டது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியிலும் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலகி குறைப்பதற்கு முதலமைச்சர் அறிவிப்பு போன்ற வெளியீட்டு இருக்கிறார் இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிடும் பொழுது, எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து புதுச்சேரி அரசு கூடுதலாக 300 ரூபாய் மானியம் வழங்குகிறது.
இதனால் சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப் படுகிறது. அதைப்போல, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மத்திய அரசு ரூபாய் 200 மானியமாக அளித்து இருப்பது மகிழ்ச்சியை உருவாக்கி இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News