புதுச்சேரி: இன்று இரவு 7 மணியுடன் முடிவடைகிறது தேர்தலுக்கான பிரச்சாரங்கள்!
By : Janani
புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூர்வ கார்க் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சட்டம் 144 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடை காலத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்குத் தடை இல்லை. இந்த உத்தரவானது தேர்தல் நேர்மையாக நடப்பதற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் நடத்தை முறைகளைக் கண்காணிக்கும் குழு அறிவுறுத்தலின் படி விதிக்கப்பட்டுள்ளது.
பிற கட்டுப்பாடுகளாக, சட்டவிரோதமாகச் சட்டசபை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்கள் நடத்துவது மற்றும் ஆயுதங்கள், பேனர்கள் மற்றும் பலகைகள் போன்றவற்றைக் கட்சிகளோ அல்லது தனி நபர் ஏந்தி செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தல் புதுச்சேரியில் 23 தொகுதிகளிலும், காரைக்காலில் 5 தொகுதிகளிலும், மஹி மற்றும் யாணம் போன்றவற்றில் தலா ஒரு தொகுதிகளிலும் போன்ற 30 தொகுதிகளிலும் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் சுயட்சி மற்றும் கூட்டணியாக 324 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். புதுச்சேரி மற்றும் வெளி பிராந்தியத்தில் மொத்தம் 10.03,681 வாக்காளர்கள் உள்ளனர் மற்றும் 1,588 வாக்குச் சாவடிகள் யூனியன் பிரதேசத்தில் உள்ளன.