Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: மே 7 இல் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள N ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சகம்!

புதுச்சேரி: மே 7 இல் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள N ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சகம்!

JananiBy : Janani

  |  6 May 2021 1:15 AM GMT

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் வெற்றி பெற்ற AINRC தலைவரும் முதலமைச்சருமான N ரங்கசாமி, மே 7 ஆம் தேதி புதிய அமைச்சகத்தை அமைக்கச் சத்திய பிரமாணம் செய்யவுள்ளதாகவும் மற்றும் அமைச்சரவையில் பா.ஜ.கவும் ஒரு பகுதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


யூனியன் பிரதேசத்தில் NDA வை AINRC தலைவர் வழிநடத்துகிறார், முன்னணியின் ஒரு அங்கமாக பா.ஜ.க அமைச்சரவையில் ஒரு பகுதியாக இருக்கும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கினால் துணை முதல்வரும் இருப்பார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 6 இல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், திங்கட்கிழமை அன்று புதிய அரசாங்கத்தை அமைப்பதை AINRC தலைவர் திங்களன்று உறுதிப்படுத்தினார்.

லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜனை ராஜ் நிவாஸ்கு அனைத்து இது தொடர்பான கடிதத்தை அவர் சமர்ப்பித்தார். ரங்கசாமி அவர்கள், முன்னாள் PWD அமைச்சர் A நமச்சிவாயம், மன்னடிபேட் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும் மற்றும் பா.ஜ.க உறுப்பினருமான நிர்மல் குமார் சுரனாவுடன் தமிழிசை சௌந்தர ராஜனைச் சந்தித்தார்.


சட்டமன்ற தேர்தலில், AINRC 10 இடங்களிலும், பா.ஜ.க ஆறு தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும், அதன் கூட்டணி திமுக ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. ஆறு சுயட்சி வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர். புதுச்சேரி சட்டமன்றத்தில் பெரும்பான்மை 16 ஆகும்.

source: https://www.timesnownews.com/india/puducherry/article/n-rangasamy-led-puducherrys-new-ministry-to-take-oath-on-may-7-bjp-to-be-part-of-cabinet/753323

Next Story
கதிர் தொகுப்பு
Trending News