Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: 75 ஆண்டு சுதந்திரதினத்தைக் குறிக்கும் விழாவைத் தொடங்கிவைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்.!

புதுச்சேரி: 75 ஆண்டு சுதந்திரதினத்தைக் குறிக்கும் விழாவைத் தொடங்கிவைத்தார் தமிழிசை சௌந்தரராஜன்.!

JananiBy : Janani

  |  14 March 2021 2:10 AM GMT

வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் காந்தி திடலில் வைத்து 75 ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அசாடி கா அம்ருத் மஹோத்சவ என்ற நீண்ட ஆண்டுக்கால விழாவை லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் தொடங்கிவைத்தார். இந்த நடவடிக்கையானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை 75 வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இவை அனைத்தும் 75 வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது.




லெப்டினென்ட் கவர்னர் முதலில் 75 படகுகளுக்குக் கொடியசைத்து வைத்து படகு பேரணியைத் தொடங்கிவைத்தார். லெப்டினென்ட் கவர்னரது டிவிட்டர் பக்கத்தில், "கடற்கரையில் காலையில் 75 படகுகளுக்கு சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் கொடியசைத்துத் தொடங்கிவைக்கப்பட்டது. இதற்குக் கொடியசைத்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி," என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் 75 மாணவர்கள் கொண்ட சைக்கிள் பேரணியையும் தொடங்கிவைத்தார் மற்றும் ப்ரோமென்டோ கடற்கரையில் 75,000 கன்றுகளை நட்டு மரக்கன்றுகளை நடுவதற்கான ஊக்கத்தையும் அளித்துள்ளார். தண்டி யாத்திரையின் 91 நினைவு விழாவில் கலந்து கொண்டார். அங்குத் தேச பக்தி பாடல்கள் வைத்து NSS மாணவர்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர ராஜன், புதுச்சேரி விடுதலை வீரர்களுக்கான நிலம் என்றும் மற்றும் பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதி போன்ற சமூக சீர்திருத்த வாதிகளின் நிலம் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News