கருப்பு பூஞ்சைக்கு மருந்துகளை வரவழைத்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை!
By : Parthasarathy
நமது நாடு இன்னும் கொரோனாவிலிருந்து மீண்டு வராத நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கருப்பு பூஞ்சை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களின் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நோய் குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு வருவதால் மருத்துவர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கருப்பு பூஞ்சை நோயால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நபர்களுக்கு தெலுங்கானாவிலிருந்து மருந்துகளை உடனடியாக வரவழைத்தார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். கருப்பு பூஞ்சை நோயின் சிகிச்சைக்கு பயன்படுத்தும் பத்து ஆம்பொனைக்ஸ் மருந்துகளை தெலுங்கானாவிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழிசையின் வேண்டுகோளால் வந்தடைந்தது.
பல மாநிலங்களில் குறிப்பிட்ட துறை அமைச்சர் மக்களின் கோரிக்கை மற்றும் பிரச்னையை கேட்காமல் இருக்கும் நிலையில், தான் துணை நிலை ஆளுநராக இருக்கும் புதுச்சேரியில் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து தேவை என்று அறிந்த உடனே தெலுங்கானாவிலிருந்து மருந்தை வரவழைத்து அங்கு சிகிச்சை பெரும் நபர்களுக்கு அளித்த தமிழிசையின் செயல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும்.