புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட Dr. தமிழிசை!
By : Parthasarathy
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஜூன் 16 முதல் 19 ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த கொரோனா திருவிழாவில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புதுச்சேரியை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று திருவாண்டார் கோயில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தமிழிசை நேரில் சென்று தொடங்கிவைத்தார்.
இது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கூறும்போது "புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் இன்று திருவாண்டார் கோயில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை நேரில் சென்று தொடங்கி வைத்துள்ளேன்.
இந்த தடுப்பூசி முகாமில் கிராமப்புறங்களில் இருக்கும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட துணை ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்." என்று அவர் கூறினார்.