புதுச்சேரி: பதவியேற்றதைத் தொடர்ந்து முக்கிய அரசாங்க உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் N ரங்கசாமி!
By : Janani
வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரியின் முதலமைச்சராக அகில இந்திய NR காங்கிரஸ் தலைவர் N ரங்கசாமி பதவியேற்றார். ராஜ் நிவாஸில் வைத்து வெள்ளிக்கிழமை மதியம் 1.20 மணியளவில் லெப்டினென்ட் கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரங்கசாமி அவர்கள் தமிழில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிஷான் ரெட்டி, பா.ஜ.க புதுச்சேரி நிர்வாகி நிர்மல் குமார் சுரானா, கர்நாடக மாநிலங்களவை MP ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி RS MP N கோகுல கிருஷ்ணன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் L முருகன், AINRC MLA க்கள் மற்றும் பா.ஜ.க மற்றும் அதிமுக தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற சில மணி நேரத்திலே, ரங்கசாமி சட்டமன்றத்தில் தனது இருப்பிடத்திற்குச் சென்று, மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நியாய விலை கடைகளில் இலவச அரிசி வழங்குவது, முதியோர்கள் மற்றும் விதவைகள் 10,000 புதிய பயனாளர்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிப்பது, தொழில்துறை படிப்புகளுக்கு மத்திய சேர்க்கை குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவியை நீட்டிப்பது போன்றவை அடங்கும்.
செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி, புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து AINRC மற்றும் பா.ஜ.க இடையே ஒருமித்த கருத்து எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். AINRC மற்றும் பா.ஜ.க இடையே தலா மூன்று அமைச்சர்கள் இருப்பர். மேலும் பா.ஜ.கவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
"சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். AINRC உடன் கலந்துரைக்கப்பட்டு அமைச்சரவை நீடிப்பது குறித்து தேதி அறிவிக்கப்படும். மேலும் அப்போது பா.ஜ.க அமைச்சர்களும் துணை முதலமைச்சரும் பதவியேற்பார். அரசாங்கத்தைச் சுகமாக நடத்தி, மக்களுக்குச் செய்த கடைமைகளை நிறைவேற்றுவோம்," என்று ரெட்டி தெரிவித்தார்.
Source: https://timesofindia.indiatimes.com/city/puducherry/puducherrys-new-cm-rangasamy-signs-gos-for-sops-on-first-day/articleshow/82474299.cms