புதுச்சேரி: பா.ஜ.க வில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் P கண்ணன்!
By : Janani
புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான P கண்ணன் மற்றும் அவரது மகனுடன் பாரதீய ஜனதாவில் மார்ச் 14 இல் இணைந்தார். டெல்லி கட்சி தலைமையகத்தில் வைத்து கண்ணன் மற்றும் அவரது மகனை, பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வரவேற்றார்.
2019 இல் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான கண்ணன், காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கு முன்னதாக "மக்கள் முன்னேற்றக் காங்கிரஸ்" என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
புதுச்சேரியில் ஏப்ரல் 6 இல் 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து இந்திய NR காங்கிரஸ் மற்றும் அகில இந்தியத் திராவிட முன்னேற்றக் கழகம்(AIADMK) உடனான தொகுதிப் பங்கீடுகள் குறித்து இறுதி செய்யப்பட்டதாகப் புதுச்சேரி பா.ஜ.க பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார். "NR காங்கிரஸ் 16 இடங்களிலும் மற்றும் 14 இடங்களில் பா.ஜ.க-AIADMK இடங்களில் போட்டியிட உள்ளன. மேலும் முதலமைச்சராக வேட்பாளராக N ரங்க ஸ்வாமி உள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.
யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முதலமைச்சர் V நாராயண ஸ்வாமி அவரது ஐந்து ஆண்டுக் காலம் முடிவதற்கு முன்னரே கவிழ்ந்தது. சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து 33 பேர் கொண்ட சட்டசபையில் பிப்ரவரி 22 இல் நாராயண ஸ்வாமி ராஜினாமா செய்தார்.